புதிய மாணவர் பதிவுகள் மற்றும் கல்லூரி ஆரம்பமாவது தொடர்பான முக்கிய விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன:
• புதிய மாணவர் பதிவு:
o திகதி: 18.06.2026 (வியாழக்கிழமை)
o நேரம்: காலை 9.00 மணி
o இடம்: யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரி
• விடுதி வருகை மற்றும் கற்றல் நடவடிக்கை:
o மாணவர்கள் 18 ஆம் திகதி பதிவு செய்தல்களை முடித்த பின்னர் தமது வீடுகளுக்குத் திரும்பச் செல்லலாம்.
o பின்னர், 24.06.2026 அன்று கல்லூரியில் நிரந்தரமாகத் தங்கியிருந்து கற்பதற்குத் தேவையான ஆயத்தங்களுடன் வருகை தரல் வேண்டும் (விபரங்களுக்கு Annex 1 ஐ வாசிக்கவும்).
• திசைமுகப்படுத்தல் நிகழ்வு (Orientation Programme):
o 25.06.2026 அன்று திசைமுகப்படுத்தல் நிகழ்வுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும்.
• கொண்டுவர வேண்டிய ஆவணங்கள்:
o இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்களில் (Reg. Form & Annex I - VII), சுயவிவரப் படிவம் (Bio-data Form) மற்றும் சத்தியஉறுதியுரை (Affidavit) ஆகியவற்றை மட்டும் மாணவர்கள் பூரணப்படுத்தி எடுத்து வர வேண்டும்.
பீடாதிபதி
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரி