22.01.2021
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
சகல கற்பித்தலில் தேசிய டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்திசெய்த 2016/2018 ஆம் கல்வியாண்டு ஆசிரிய மாணவர்கட்கு,
தங்களின் ஆசிரிய நியமனத்திற்கு வேண்டிய கீழ்வரும்; ஆவணங்களை 30.01.2021 சனிக்கிழமை காலை 9.00 மணி – 12.00 மணி வரை யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் மைதானத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் தாங்கள் நேரடியாக தேசிய அடையாள அட்டையுடன் வருகை தந்து பெற்றுக்கொள்ள முடியும் என பீடாதிபதி அவர்கள் அறிவித்துள்ளார்.
ஆவணங்கள்
1. பிறப்புச் சான்றிதழ்
2. க.பொ.த. சா/த, க.பொ.த உ/த சான்றிதழ்கள்
3. கற்பித்தலில் தேசிய டிப்ளோமாச் சான்றிதழ்
4. செயல்நிலை ஆய்வுப் புத்தகம்
• மேலும் தாங்கள் பெற்றுக்கொண்ட நூலக புத்தகங்கள் மற்றும் கல்லூரி அடையாள அட்டை என்பவற்றை மீள ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
எனவே வருபவர்கள் தங்களின் விபரங்களை கீழே தரப்பட்ட படிவத்தினூடாக சமர்ப்பிக்கவும்.
https://forms.gle/7uJ8NjfGYsmSpgVr5
சு.பரமானந்தம்
பீடாதிபதி
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி