யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் 2023 ஆம் ஆண்டிற்கான முத்தமிழ் விழா நிகழ்வுகள் கல்லூரியின் பீடாதிபதி கலாநிதி சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் 20.11.2023 அன்று இரு அமர்வுகளாக நடைபெற்றது. இதில் முதலாம் அமர்வானது பேராசிரியர் கா.சிவத்தம்பி அரங்காக நடைபெற்றது. இதன் பிரதம விருந்தினராக பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் தகைசார் பேராசிரியர் வ. மகேஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் சிறப்பு விருந்தினர்களாக கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் அதிபர் திரு சந்திரமௌலிசன் திலீபன் அவர்களும், இலங்கை வங்கி சிரேஷ்ட முகாமையாளர் திரு எ. சந்தனு அவர்களும் கலந்து கொண்டனர். அத்துடன் கௌரவ விருந்தினராக வலி கிழக்கு பிரதேச சபையின் செயலாளர் திரு இராமலிங்கம் பகீரதன் அவர்களும் பவாணி களஞ்சிய உரிமையாளர் திரு பொன்னையா கிருஷ்ணானந்தன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இவ் அமர்வில் கோலாகலமான இன்னிய வரவேற்புடன் பல்வேறுபட்ட கலை கலாசார நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன. அத்துடன் மாலை அமர்வாக நவாலியூர் சோமசுந்தர புலவர் அரங்கு நடைபெற்றது. இதன் பிரதம விருந்தினராக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழித் துறையைச் சேர்ந்த கலாநிதி க.ரகுவரன் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் இவ் அமர்வின் சிறப்பு விருந்தினர்களாக பொது வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி சி.சிவன்சுதன் அவர்களும் யாழ்ப்பாணம் தேசிய கல்லூரியின் ஓய்வுநிலை சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி விக்னேஸ்வரி நரேந்திரா அவர்களும் கலந்து சிறப்பித்தனர். அத்துடன் கௌரவ விருந்தினர்களாக யாழ்ப்பாணம் தேசிய கல்விக் கல்லூரியின் ஓய்வு நிலை விரிவுரையாளர் திரு மு.கௌரிகாந்தன் அவர்களும் யாழ்ப்பாணம் தேசிய கல்லூரியின் பழைய மாணவி திருமதி காயத்ரி அகிலன் அவர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. இவ் அமர்விலும் பல்வேறுபட்ட கலை கலாச்சார நிகழ்வுகள் நடைபெற்றதுடன் இந்நிகழ்வில் விரிவுரையாளர்கள் முதலாம் இரண்டாம் வருட மாணவ ஆசிரியர்கள் மற்றும் கோப்பாய் ஆசிரியர் கலாசலையின் விரிவுரையாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. |