ஒன்பதாவது சர்வதேச யோகா தின நிகழ்வு யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் புதன்கிழமை காலை 7:00 மணிக்கு இடம் பெற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி மாணவர்களும் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி மற்றும் கல்வியியலாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வானது இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் யாழ் மாவட்ட செயலர், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர், இந்திய துணை தூதரக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது |