"Wings to Digital World" எனும் தொனிப்பொருளில் கல்வி அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக முதலாம் வருட மாணவ ஆசிரியர்களுக்கான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப செயலமர்வு யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி திரு.இ.லோகேஸ்வரன் தலைமையில்,சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. மகாலிங்கம் நிரேஸ்குமாரின் ஒருங்கிணைப்பில் மிகச்சிறப்பாக நடந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், உயர் கல்வி நிறுவகம், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, வலயக் கல்விப் பணிமனைகள் மற்றும் கல்வி அமைச்சு என்பவற்றிலிருந்து விரிவுரையாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் அதிகாரிகள் வளவாளர்களாகப் பங்குபற்றி இச்செயலமர்வை வளப்படுத்தியிருந்தனர்.