யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி திரு. இராசையா யோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் “தூய்மையான இலங்கை” நிகழ்வானது 01.01.2025 அன்று சிறப்பான முறையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் கலந்து “தூய்மையான இலங்கை” எனும் தொனிப்பொருளில் உறுதிமொழி எடுத்து 2025 ஆம் ஆண்டுக்கான தமது கடமைகளை ஆரம்பித்துக் கொண்டனர். |