சகல முதலாம் வருட மாணவ ஆசிரியர்களுக்கும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருப்பதால், எதிர்வரும் 10/08/2020, காலை 8.00 மணிமுதல் பிற்பகல் 3.00 மணிவரை கல்லூரிக்கு சமூகம் தரலாம். கல்லூரிக்குச் சமுகமளிக்கும் போது கொண்டு வர வேண்டிய பொருட்கள் 1. கழுவிப் பயன் படுத்தக் கூடிய முகக்கவசங்கள் 4 - 5 கொண்டுவருதல் வேண்டும் 2. கைகளைத் தொற்று நீக்கிக் கழுவுவதற்கான இரசாயனத் திரவங்கள் சுயபாதுகாப்புக் கருதி சொந்தமாகக் கொண்டு வருதல் வேண்டும் 3. கல்லூரிச் சீருடைகளுக்கு மேலதிகமாக bottom – கறுப்பு 1, வெள்ளை நிற T சேட் - 1 கொண்டுவருதல் வேண்டும். 4. கம்பஹா, கொழும்பு, புத்தளம், களுத்துறை மாவட்டங்களில் உள்ளவர்கள் நீங்கள் வசித்த பகுதி தனிமைப்படுத்தல் பகுதிக்குள் உள்ளடங்கவில்லை என்பதை உறுதிப்படுத்திய கடிதம் (பொதுசுகாதார உத்தியோகத்தர் அல்லது கிராமசேவையாளர் அல்லது அகில இலங்கை சமாதான நீதிவான் ஆல் உறுதிப்படுத்த வேண்டும்.) 5. தலையணை உறை, படுக்கை விரிப்பு என்பன வெள்ளை நிறத்தில் மட்டும் பாவனைக்கு கொண்டு வருதல் வேண்டும். 6. கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளின் தேவைக்காக Tab மற்றும் மடி கணனி கொண்டுவரலாம். 7. உணவு உண்பதற்கான பீங்கான் (மெல்லிய பச்சைநிறம்) , தேனீர்க்கோப்பை (மெல்லிய பச்சைநிறம் அல்லது வெள்ளை நிறம்) கொண்டுவருதல் வேண்டும். (படம் இணைக்கப்பட்டுள்ளது) 8. ஆண் மாணவ ஆசிரியர்கள் சீருடை விடயத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைவாக சீருடைகளை கொண்டுவருதல் வேண்டும். 9. சுகாதார காரணங்களிற்காக பெற்றோர்கள் கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். சு.பரமானந்தம் பீடாதிபதி |