எமது கல்லூரியின் மாணவ ஆசிரியர்களின் செயற்பாட்டின் மூலம் பசுமை எண்ணக்கருவை செயலாக்கம் செய்வதில் வெற்றியை அடைந்துவருகின்றோம். அந்த வகையில் நீர்வேலியைத் தளமாகக் கொண்டியங்கும் Green Layer மரநடுகை அமைப்பினால் எமது கல்லூரியின் செயற்பாட்டை ஊக்குவித்து 04.09.2022 அன்று கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் எமது கல்லூரியின் பீடாதிபதி உயர்திரு சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களுக்கு “பசுமைப் புரவலர்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. |