யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி மேற்கொண்டு வரும் முன்மாதிரியான செயல்பாடுகளின் ஒரு பகுதியாக அனர்த்த முகாமைத்துவ செயலமர்வுகள் நடைபெற்று அதன் இறுதிப் பகுதியான சர்வதேச அனர்த்த குறைப்பு தினமானது கல்லூரியின் பீடாதிபதி கலாநிதி சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் 13 .10 .2023 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக புவியியல் துறை தலைவர் கலாநிதி அல்பர்ட் ஆண்டனி ராஜன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மேலும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக புவியியல் துறை விரிவுரையாளர்கள் மற்றும் விருந்தினர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வில் பல்வேறுபட்ட கலை நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் அனைத்து விரிவுரையாளர்களும் மாணவ ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. |