யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் குருசேத்திரம் அமைப்பின் ஒழுங்குபடுத்தலுடன் பீடாதிபதி உயர்திரு சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் "நிலைபேறான பொருளாதார அபிவிருத்தியை நோக்கிய கல்வி" எனும் தலைப்பில் திரு. திருநாவுக்கரசு தயந்தன்(பொறியியலாளர், சமூக ஆர்வலர், சிங்கப்பூர்) அவர்களால் இணைய வழியில் 11.01.2021 அன்று கருத்துரை வழங்கப்பட்டது. இதில் உப பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவ ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர். |