யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் விரிவுரையாளர்
திருமதி ஜெயலட்சுமி உதயகுமார் அவர்களின் மணிவிழா நிகழ்ச்சிகள் பீடாதிபதி திரு.இ.லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் 22/04/2025 அன்று இடம்பெற்றது. ஆசிரிய கல்வியியலாளர் கழகம் இதற்கான ஒழுங்குபடுத்தல்களை மேற்கொண்டது. இந்நிகழ்வில் மணிவிழா நாயகியின் குடும்பத்தினர், ஓய்வு பெற்ற விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.