2019, 2020 ஆம் ஆண்டுகளில் க.பொ.த உயர்தர பரீட்சைகளில் சித்தி அடைந்து தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு அனுமதி பெற்றுக்கொண்ட மாணவ ஆசிரியர்களை தேசிய கல்விய கல்லூரிகளில் இணைத்துக் கொள்ளும் செயற்பாடுகளில் ஓர் அங்கமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரிக்கு புதிய மாணவ ஆசிரியர்களை இணைத்துக் கொள்ளும் செயற்பாடானது 12.10.2023 அன்று கல்லூரியில் நடைபெற்றது. இம்மானவர்களின் ஆரம்ப நாள் நிகழ்வுகளானது இரண்டாம் வருட மாணவர்கள் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வுடன் ஆரம்பமாகி கல்லூரியின் பீடாதிபதி கலாநிதி சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் கலாசார மன்றத்தின் ஒழுங்கு அமைப்பில் சிறப்புற நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார் |