விளையாட்டுத்துறை அமைச்சின் செயற்திட்டத்திற்கு அமைவாக, உடற்கல்வி மன்றத்தின் ஒழுங்கமைப்பில் “தேசிய விளையாட்டுத் தினம்” யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் பீடாதிபதி உயர்திரு சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் நிகழ்நிலையில் 30.07.2021 அன்று மு.ப. 9.00 மணிக்கு நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக தீவகக் கல்வி வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு. பொன்னம்பலம் சகிலன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் உப பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், மாணவ ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். |