யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் குருசேத்திரம் அமைப்பின் ஒழுங்குபடுத்தலுடன் பீடாதிபதி உயர்திரு சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் "மாணவர் மையக் கல்வி அணுகுமுறைகள்" எனும் தலைப்பில் கலாநிதி பி. சாந்தி(உதவிப் பேராசிரியர்/ தமிழ்த்துறைத் தலைவர், அரச பெண்கள் கல்லூரி, திருவனந்தபுரம், இந்தியா) அவர்களால் இணைய வழியில் 29.04.2021 அன்று கருத்துரை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் உப பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், மாணவ ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து சிறப்பித்தனர். பயனுள்ள பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. |