யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
ஆய்வு அபிவிருத்திப்பிரிவு
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆய்வு அபிவிருத்திப்பிரிவின் 2 ஆவது கல்வியியலில் செயல்நிலை ஆய்வு மாநாடு 30.04.2025 நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மேற்படி ஆய்வு மாநாட்டுக்கு யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில்
2020/2022 கல்வியாண்டு உள்ளகப்பயிற்சியை நிறைவு செய்த மாணவ ஆசிரியர்கள் (Author) அவர்களுடைய மேற்பார்வையாளர்களுடன் (
Co- Author) இணைந்து ஆய்வுச்சுருக்கம் (1Page ) மற்றும் விரிவாக்கப்பட்ட ஆய்வுச்சுருக்கத்தை (8 -10 Pages) சமர்ப்பிக்க முடியும். (இணைப்பு 01)
சமர்ப்பிக்கப்படுகின்ற ஆய்வுச்சுருக்கம் மற்றும் விரிவாக்கப்பட்ட ஆய்வுச்சுருக்கம் பல்கலைக்கழக பேராசிரியர்களை உள்ளடக்கிய சுயாதீனமான மதிப்பீட்டுக்குழுவின் மதிப்பீட்டின் பிரகாரம் பாடரீதியில் ஒவ்வொரு ஆய்வுக்கட்டுரைகள் தெரிவுசெய்யப்பட்டு விபரங்கள் வெளியீடு செய்யப்படும்.
பின்னர் மதிப்பீட்டுக்குழுவின் முடிவுகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் Double Blind Review செயன்முறைக்கு உட்படுத்தப்படும். அதன் பிரகாரம் ஆய்வாளரினால் ஆய்வுக்கட்டுரை தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
இறுதியாக ஆய்வுக்கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு மாநாட்டில் முன்வைப்பதற்கான (15 நிமிடங்கள்) முன்வைப்பு ஆவணம் - 15 Slides (Camera Ready Copy) தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
ஆய்வுச்சுருக்கம் (Abstract) மற்றும் விரிவாக்கப்பட்ட ஆய்வுச்சுருக்கம்
(Extended Abstract) தயாரிப்பதற்கான தொழில்நுட்பரீதியான அறிவுறுத்தல்கள் ,izg;G 2 இல் வழங்கப்பட்டுள்ளது.
ஆய்வுச்சுருக்கம் மற்றும் விரிவாக்கப்பட்ட ஆய்வுச்சுருக்கம் மற்றும் முன்வைப்பு ஆவணம் (Camera Ready Copy) அனுப்பிவைக்கப்பட வேண்டிய மின்னஞ்சல் முகவரி –
jncoeears2025@gmail.com