அரச நிறுவனங்களின் புது வருட கடமைகளை ஆரம்பிக்கும் சத்திய பிரமாண நிகழ்வானது யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் பீடாதிபதி கலாநிதி சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் 01.01.2024 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தொனிப் பொருளை மையமாகக் கொண்டே கல்லூரியின் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டிற்கான தொனிப் பொருளாக "நேர்மைத்திறனே எனது அடையாளமாக..." என்னும் தொனிப் பொருளை மையமாகக் கொண்டு இவ்வருடத்தில் சேவையாற்றுவதற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது. அத்துடன் அரச சுற்றுநிருபத்திற்கு அமைய அனைத்துக் கல்வியியளார்கள் மற்றும் கல்வி சாரா பணியாளர்களின் பங்கு பற்றலுவடன் சத்திய பிரமாண நிகழ்வும் இடம்பெற்றது. |