யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரிக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் செயற்பாடு ஆரம்பமாக உள்ள நிலையில், இலங்கையில் உயர்கல்வி நிறுவனங்களில் காணப்படும் பகிடி வதைகளை கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட பகிடி வதைக்கு எதிரான சட்டத்தை சிரேஷ்ட மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி பகிடி வதைக்கு எதிரான விழிப்புணர்வை உருவாக்கும் செயற்பாடாக எமது கல்லூரியின் பீடாதிபதி கலாநிதி சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் வழிப்படுத்தலில் சட்டத்தரனி திருமதி அம்பிகா கஜந்திரன் அவர்களினால் சிறப்புற நடைபெற்றது. இந்நிகழ்வில் பகிடி வதைக்கு எதிரான சட்டம் தொடர்பான விடயங்களும் சட்ட ஏற்பாடுகளும் மிகத் தெளிவாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. |