யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவ ஆசிரியர்களின் "பாடசாலையும் சமூகமும் செயற்றிட்டம் 2023" ஆனது கல்லூரியின் பீடாதிபதி கலாநிதி சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் நெறிப்படுத்தலில் 01.11.2023 மற்றும் 02.11.2023 ஆகிய இரு தினங்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காணப்படும் ஐந்து கல்வி வலயங்களில் இருந்தும் ஐந்து பாடசாலைகளை மையமாகக் கொண்டு நடைபெற்றது. இதில் தீவகக் கல்வி வலயத்தில் யா/ காரைநகர் மெய்கண்டான் வித்தியாலயம், வலிகாமம் கல்வி வலயத்தில் யா/பண்ணாகம் மெய்கண்டான் வித்தியாலயம், தென்மராட்சி கல்வி வலயத்தில் யா/வரணி மத்திய கல்லூரி, வடமராட்சி கல்வி வலயத்தில் அல்வாய் சின்னத்தம்பி வித்தியாலயம், யாழ்ப்பாணம் கல்வி வலயத்தில் யா/ நீர்வேலி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசால ஆகியவற்றில் இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் இரண்டாம் வருட மாணவ ஆசிரியர்கள் அனைவரும் ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டு விரிவுரையாளர்களின் வழிகாட்டலுடன் ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் அனுப்பப்பட்டனர். அங்கு பாடசாலைக்கு தேவையான அபிவிருத்தி செயல்பாடுகளுக்கு தமது மனிதவள ஒத்துழைப்பை வழங்கி சமூகத்தையும் கல்லூரியையும் இணைக்கும் செயற்பாடுகள் சிறப்பாக நடைபெற்றது. இதற்கு அனைத்து விரிவுரையாளர்களும் மாணவ ஆசிரியர்களும் தமது சிறந்த ஒத்துழைப்புகளை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இச்செயற்றிட்டமானது பாடசாலை அதிபர் மற்றும் குறிப்பிட்ட பாடசாலை சமூகத்தினருடன் இணைந்ததாகவும் பூரண ஒத்துழைப்புடனும் சிறப்பாக நடைபெற்றமை விசேட அம்சமாகும். |