தேசிய வாசிப்பு மாதத்திற்கான பரிசளிப்புவிழா 14.11.2019 அன்று கல்லூரியின் பீடாதிபதி திரு சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் மங்களவிளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டது. வைத்தியகலாநிதி உயர் திரு லயன் வை.தியாகராஜா(சிரேஷ்ட ஆலோசனை சபை உறுப்பினர், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி) அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். கௌரவ விருந்தினராக கலாநிதி கல்பனா சந்திரசேகரர்(சிரேஷ்ட உதவி நூலகர், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்) அவர்கள் கலந்து சிறப்பித்தார். பொது அறிவுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் , நூலகத்திலிருந்து கூடுதலான நூல்களைப் இரவல் பெற்று வாசித்தலில் ஈடுபட்டவர்களுக்குமாக பரிசில்கள் வழங்கப்பட்டது. நூலகப் பொறுப்பு விரிவுரையாளரான திரு த.மோகன் அவர்களும் உபபீடாதிபதிகள், இணைப்பாளர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் முகிழ்நிலை ஆசிரிய மாணவர்கள் மற்றும் நூலக உதவியாளர்கள் அனைவரும் இந்த விழாவில் கலந்து சிறப்பித்திருந்தனர்.