தேசிய கல்வியியல் கல்லூரிகளின் 2015 - 2017, 2016 - 2018, 2017 - 2019 ஆகிய குழுக்களுக்கு இரண்டு கட்டங்களாக கற்பித்தலில் தேசிய டிப்ளோமா சான்றிதழளிப்பு விழா பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) 07.10.2022 அன்று ஆரம்பமானது. தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுகளில் 19 தேசிய கல்வியியல் கல்லூரிகள் மூலம் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த டிப்ளோமாதாரிகளுக்கு முதற்கட்டமாக 07, 08, 09, 10 ஆகிய திகதிகளில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதன்போது 08.10.2022 அன்று யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த ஒரு தொகுதி டிப்ளோமாதாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இரண்டாம் கட்டம் 2022 ஒக்டோபர் 17,18, 19, 20 ஆகிய திகதிகளிலும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த ஏனைய டிப்ளோமாதாரிகளுக்கு எதிர்வரும் 2022 ஒக்டோபர் 17,18இல் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. |