யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆரம்பக் கல்வி மன்றத்தினரின் ஏற்பாட்டில் அன்னையர் தின நிகழ்வானது கல்லூரியின் பீடாதிபதி உயர்திரு சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கோப்பாய் கோட்டக்கல்வி அதிகாரி திரு நாகலிங்கம் சிவனேசன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். அன்னையர் தினத்தை முன்னிட்டு கோப்பாய்க் கோட்டப் பாடசாலைகளில் நடைபெற்ற கட்டுரை, கவிதை, ஓவியப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்வும் அன்றைய தினம் நடைபெற்றது. இந்நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்கள், அப்பாடசாலையின் ஆசிரியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். |