யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் கல்லூரி தினத்தை முன்னிட்டு வருடாவருடம் வெளிவரும் கலாசுரபி சஞ்சிகையானது இந்த வருடம் உலக ஆசிரியர் தினமான 05.10.2022 அன்று பீடாதிபதி திரு. சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களினால் கல்லுரிச் சமூகத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் முதல் பிரதியை இந்நூலிற்கு அனுசரணை வழங்கிய திரு.பொன்னுத்துரை கிருஷ்ணானந்தன் (உரிமையாளர் பவானி களஞ்சியம், பொன்செல்வமஹால் திருமண மண்டபம்) அவர்கள் பெற்றுக்கொண்டார். இந்த நூலின் ஆய்வுரையை திரு.குமரேசன் பாலஷண்முகன் (MA.,M.phil) (விரிவுரையாளர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை) அவர்கள் வழங்கி சிறப்பித்தார். |