யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் "சமூகத்திற்கான மாற்றம் என்னிலிருந்து.." என்னும் எண்ணத்தில் உருவாக்கிய "குருசேத்திரம்" அமைப்பின் 39ஆவது அறிவுப் பகிரவுத் தொடரனது "வானை அளப்போம்" எனும் தலைப்பில் பீடாதிபதி உயர்திரு சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் 14.07.2021 அன்று பி.ப.8 மணிக்கு நிகழ்நிலையில் கருத்துரை வழங்கப்பட்டது. இதில் இந்தியாவின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவரான திருமதி.பாரதி பாஸ்கர் அவர்கள் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினார். இந்நிகழ்வில் உப பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், மாணவ ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர். இதில் பயனுள்ள பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.