யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி திரு.சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் ஆரம்பக் கல்வி மன்றத்தின் காப்பாளர் விரிவுரையாளர் திரு. கி. கிருஸ்ணயோகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலுடன் சர்வதேச சிறுவர் முதியோர் தின விழா ஆனது 01.10.2020 அன்று கல்லூரியின் பிரதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. முதன்மை விருந்தினராக செல்வி. ஜெயா தம்பையா(பணிப்பாளர், ஆரம்ப பிள்ளைப்பருவ அபிவிருத்திப் பிரிவு, மாகாணக் கல்வித்திணைக்களம், வடமாகாணம்) அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு. சிற்றம்பலம் கணேசலிங்கம்(உதவிக்கல்விப் பணிப்பாளர், ஆரம்ப பிள்ளைப்பருவ அபிவிருத்திப் பிரிவு, மாகாணக் கல்வித்திணைக்களம், வடமாகாணம்) மற்றும் திரு.பரமேஸ்வரன் தயாரூபன்(கிராம சேவை உத்தியோகத்தர், கோப்பாய் மத்தி) அவர்களும் கலந்து சிறப்பித்தனர். கல்லூரிச் சமூகத்தினருடன் விருந்தினர்களும் கலந்து, அயற்சூழலிலுள்ள சிறார்கள், முதியோர்களை கௌரவித்த சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்வுகள் நடைபெற்றது. நாடகம் 1 - "கானல்" - நெறியாள்கை திரு. க.இளங்குமரன்(கல்வியியலாளர்), நாடகம் 2 - "வாழ்வோம் வளர்வோம"; நெறியாள்கை-திரு.க.இ.கமலநாதன் (கல்வியியலாளர்) |