யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் நான்காம் அணி மாணவர்களினால் கல்லூரியை வாழ்த்தி வாழ்த்துக்கீதம் வெளியிடும் நிகழ்வானது கல்லூரியின் பீடாதிபதி உயர்திரு சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் 16.08.2023 அன்று இடம் பெற்றது. இவ்வாழ்த்துக்கீதமானது அந்த கல்லூரியின் நான்காம் அணி மாணவனான திரு. செல்வா செல்வரமணன் அவர்களால் படைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்லூரியின் முதலாவது பீடாதிபதி கலாநிதி க.கமலநாதன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வைத்திய கலாநிதி லயன் வை. தியாகராஜா அவர்களும் கலந்து சிறப்பித்தனர். மேலும் நான்காம் அணி மாணவர்களும் அனைத்து விரிவுரையாளர்கள் மற்றும் முகிழ்நிலை மாணவ ஆசிரியர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.