2019 மற்றும் 2020 க.பொ.த (உயர் தர) பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு சேர்த்துக்கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை கட்டம் 2 - 2022 (2023) யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் நடைபெறும் நேர்முகப் பரீட்சைக்கான தினம் 10.02.2023 ஆகும். நேர்முகப் பரீட்சைக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரம் எமது இணையத்தளத்திலுள்ள Notice எனும் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. நேர்முகப் பரீட்சைக்குத் தேவையான படிவங்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் Downloads -----> Forms எனும் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. நேர்முகப் பரீட்சைக்குத் தெரிவு செய்யப்பட்டு விண்ணப்பப் படிவம் கிடைக்காதோர் பதிவிறக்கம் செய்து அச்சுப்பிரதியைப் பயன்படுத்த முடியும். சு. பரமானந்தம் பீடாதிபதி யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி |