யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் கணித மன்றம் வழங்கும் "கணித தினம் 2022" ஆனது 17.02.2022ஆம் திகதியன்று எமது கல்லூரியின் பீடாதிபதி உயர்திரு சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக திருவாளர் K.கமலநாதன் (ஓய்வுநிலை சிரேஷ்ட விரிவுரையாளர் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி) அவர்கள் கலந்து சிறப்பித்தார். இதில் கணித மன்றம் சார்பில் பல பயனுள்ள புத்தகங்கள் வெளியிடப்பட்ட்துடன் கடந்த கோவில் 19 இடர் காலத்தில் நிகழ்நிலையில் நடைபெற்ற போட்டிகளுக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது.