கல்வியமைச்சின் தகவல் தொடர்பாடல் பிரிவினரால் Digital Education of NCoE project தொடர்பான நிகர்நிலை கலந்துரையாடல் 06.07.2020 அன்று மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் பிரதம ஆணையாளர்(ஆசிரியர் கல்வி), பணிப்பாளர்(தகவல் தொழிநுட்பம் மற்றும் தரவு முகாமைத்துவம்) , e-thaksalawa System Adminstrator திரு. ம. தினேஸ், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி திரு. சுப்பிரமணியம் பரமானந்தம் மற்றும் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் எமது கல்லூரியில் பீடாதிபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டின் ஒரு புதிய அங்கமாக தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள கற்றல் முகாமைத்துவ முறைமை (LMS) தொடர்பான அனுபவங்கள் மற்றும் ஆலோசனைகள் கலந்துரையாடப்பட்டது. யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியானது இலங்கையிலுள்ள 19 கல்வியியற் கல்லூரிகளில் கற்றல் முகாமைத்துவ முறைமையை (LMS) முதன் முதலில் அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தி வருவதுடன் கல்வியமைச்சினால் மாதிரி கற்றல் முகாமைத்துவ முறைமை (LMS) செயற்றிட்ட கல்லூரியாக தெரிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. |