கோவிட் சிகிச்சை நிலையமாக பயன்படுத்தப்படட எமது கல்லூரியை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினரும் பாதுகாப்புத் தரப்பினரும் இணைந்து மீளக் கல்வி நடவடிக்கைகளுக்காக கையளிக்கும் நிகழ்வானது 26.01.2022 ஆம் திகதியன்று எமது கல்லூரியின் பீடாதிபதி உயர்திரு சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினர்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இயக்குனர் வைத்தியகலாநிதி கே. நந்தகுமாரன் மற்றும் மேஜர் ஜெனரல் M G W W W M C B விக்ரமசின்ஹ ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். |