யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் குருசேத்திரம் அமைப்பின் ஒழுங்குபடுத்தலுடன் பீடாதிபதி உயர்திரு சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் " பாடசாலைத் தோட்டத்தில் தொழிநுட்பங்களுடன் கூடிய சேதன விவசாய உத்திகள்" எனும் தலைப்பானது மூன்று உப தலைப்புக்களாகப் பிரிக்கப்பட்டு பாடசாலைக் கலைத்திட்டத்தில் விவசாயம் எனும் தலைப்பில் திரு.க.செந்தில் குமரன்(விரிவுரையாளர், ஆசிரியர் கலாசாலை, கோப்பாய்), தொழிநுட்பங்களுடன் கூடிய சேதன விவசாய உத்திகள்(திரு.க.ஜெயபாலன்(விரிவுரையாளர், பயிரிடல் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்),பண்ணை முகாமைத்துவம் (திரு.சி.சிறீதரன்,பண்ணை முகாமையாளர்,யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) ஆகியோர்களால் இணைய வழியில் 10.03.2021 அன்று கருத்துரை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் உப பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், மாணவ ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து சிறப்பித்தனர். பயனுள்ள பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. |