யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் நினைவுப்பேருரை தொடர் 04 ஆனது "முத்தமிழ் கலாநிதி, சாகித்திய சகரம், இயலிசை வாரிதி உயர்திரு. மா.த.ந.வீரமணிஐயர் MA நினைவுப்பேருரை" 23.08.2022 புதன்கிழமை காலை 8.00 மணிக்கு பீடாதிபதி உயர்திரு சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இதில் "வெற்றிகரமான கற்பித்தலுக்கும் முன்மாதிரிக்குமான ஆசிரிய வகிபாகங்கள்" எனும் தலைப்பில் நடைபெற்றதுடன், முனைவர். தி.கமலநாதன் அவர்களின் "சிந்தனை - சொல் - செயல் - கல்லுாரியின் 22வது அகவைச்சுவர்" சமர்ப்பணமும் இடம்பெற்றது. இதில் நினைவுப் பேருரையாளர்களாக முனைவர். திருநாவுக்கரசு கமலநாதன் (முதலாவது பீடாதிபதி, யாழ்ப்பாணம் தே.க.க) அவர்களும் முனைவர். பாலசுப்பிரமணியம் தனபாலன் (சிரேஸ்ட விரிவுரையாளர், யாழ்ப்பாணம் தே.க.க) அவர்களும் கலந்துகொண்டு பேருரை ஆற்றினார். இந்நிகழ்வில் விரிவுரையாளர்கள், மாணவ ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர். |