யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரிக்கு பிரதம ஆணையாளர் (ஆசிரியர் கல்வி) Mr. K.A.D. Punyadasa அவர்களும், கல்வியியற் கல்லூரிகளுக்கான பணிப்பாளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கல்லூரிக்கு வருகை தந்து மேற்பார்வை செயற்பாடுகளில் ஈடுபட்டனர். இதன்போது யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி உயர்திரு சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் அனைத்து அதிகாரிகளும் வரவேற்கப்பட்டு பிரதான மண்டபத்தில் சமகால கல்வி செயற்பாடுகள் தொடர்பிலான கருத்துப் பரிமாற்றங்களும் நிகழ்வுகளும் இடம்பெற்றன. |