யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் 02.03.2020 அன்று பீடாதிபதி உயர்திரு சுப்பிரமணியம் பரமானந்தம் தலைமையில் காரைக்கவி கந்தையா பத்மநாதன் அவர்களின் பத்து நூல்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் ஓய்வுபெற்ற பீடாதிபதி உயர்திரு க. பேர்னாட் அவர்களும் கௌரவ விருந்தினராக யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் ஓய்வுபெற்ற பீடாதிபதி கலாநிதி ச. அமிர்லிங்கம் அவர்களும் சிறப்பு விருந்தினர்கள் விசேட விருந்தினர்கள் கலந்து சிறப்பித்தனர். |