யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் "சமூகத்திற்கான மாற்றம் என்னிலிருந்து.." என்னும் எண்ணத்தில் உருவாக்கிய “குருசேத்திரம்" அமைப்பின் 43ஆவது அறிவுப் பகிரவுத் தொடரனது “கொரோனா காலத்தில், "கற்பித்தலின் புதிய செல்நெறிகள்" "உளவளத் துணையின் அவசியம்" எனும் தலைப்பில் பீடாதிபதி உயர்திரு சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் 11.08.2021 அன்று பி.ப.8 மணிக்கு நிகழ்நிலையில் கருத்துரை வழங்கப்பட்டது. இதில் “கொரோனா காலத்தில் கற்பித்தலின் புதிய செல்நெறிகள்" எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி எஸ்.பத்மராஜா PhD அவர்களும் “கொரோனா காலத்தில் உளவளத் துணையின் அவசியம்" எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி பா.தனபாலன் PhD அவர்களும் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினார். இந்நிகழ்வில் உப பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், மாணவ ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர். இதில் பயனுள்ள பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. |