யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் நீண்டகாலம் சேவையாற்றி, இடமாற்றம் பெற்று சென்ற சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. மாசிலாமணி பிரபாகரன் அவர்களின் பிரியாவிடை நிகழ்வானது 08.12.2022 அன்று பீடாதிபதி திரு. சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் முன்னிலையில் சிறப்புற நடைபெற்றது. இந்நிகழ்வில் விரிவுரையாளர்கள், மாணவ ஆசிரியர்கள் என பலரும் கலந்து விரிவுரையாளரை வாழ்த்தி மெருகூட்டினர். |