இலங்கையிலுள்ள அனைத்துக் கல்வியியற் கல்லூரிப் பீடாதிபதிகளுக்குமான முன்னோடி கற்றல் முகாமைத்துவ முறைமையை(Learning Management System) அவதானிப்பதற்கான வதிவிடத்துடன் கூடிய களப் பயிற்சியானது 23.08.2020 மற்றும் 24.08.2020 ஆகிய இரு தினங்களும் பிரதம ஆணையாளர்(ஆசிரியர் பயிற்சி) திரு. ஈ. எம். எஸ். எக்கநாயக்க தலைமையில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியானது கற்றல் முகாமைத்துவ முறைமையை கொறோனா விடுமுறைக் காலத்தில் அறிமுகப்படுத்தி அதில் வெற்றியையும் கண்டதுடன் இலங்கையிலுள்ள அனைத்துக் கல்வியியற் கல்லூரிக்கும் முன்மாதிரியாக திகழ்கின்றது. மேலும் கல்வி அமைச்சால் முன்னோடி கற்றல் முகாமைத்துவ முறையை அறிமுகப்படுத்தும் கல்லூரியாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்நிகழ்வில் பிரதம ஆணையாளர்(ஆசிரியர் பயிற்சி), பீடாதிபதிகள், கல்வியமைச்சின் உத்தியோகத்தினர் மற்றும் e-thaksalawa பிரிவின் வளவாளர்கள், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளர்கள் பங்கு பற்றி சிறப்பித்தனர். |