யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் வளாகத்தில் காணப்படும் வித்தக விநாயகர் ஆலய சங்காபிஷேகமும் வைரவர்மடையும் கல்லூரியின் இந்து மன்றத்தின் ஏற்பாட்டில் 27.10.2023அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் அன்னதானமும் வழங்கப்பட்டதுடன் இதற்கான அனுசரணையை கல்லூரியின் ஓய்வு நிலை விரிவுரையாளர் திருமதி நரேந்திரா விக்னேஸ்வரி அவர்கள் வழங்கியிருந்தார். அத்துடன், சிற்றுண்டி பிரசாதத்திற்காக கல்லூரியிலிருந்து இடம் மாற்றம் பெற்றுச் சென்ற விரிவுரையாளர் திரு மாசிலாமணி பிரபாகரன் அவர்கள் அனுசரணை வழங்கியிருந்தார். இந்நிகழ்வில் கல்லூரியின் விரிவுரையாளர்கள், இரண்டாம் வருட மாணவ ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா பணியாளர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.