யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் குருசேத்திரம் அமைப்பின் ஒழுங்குபடுத்தலுடன் பீடாதிபதி உயர்திரு சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் "செயற்பாட்டுக் கற்கையும்; உயிர்ப்பான வகுப்பறையும்" எனும் தலைப்பில் திரு. ஞானமணி இரத்தினசிங்கம்(ஓய்வுநிலை விரிவுரையாளர், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி)அவர்களால் இணைய வழியில் 31.03.2021 அன்று கருத்துரை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் உப பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், மாணவ ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து சிறப்பித்தனர். பயனுள்ள பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. |