யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் குருசேத்திரம் அமைப்பின் ஒழுங்குபடுத்தலுடன் பீடாதிபதி உயர்திரு சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் "கொவிற் - 19 தொற்றிலிருந்து எம்மைப்பாதுகாப்பது எப்படி? எனும் தலைப்பில் வைத்திய கலாநிதி ரி. சத்தியமூர்த்தி (பணிப்பாளர், யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையம், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி, கோப்பாய்) அவர்களால் இணைய வழியில் 01.02.2021 அன்று கருத்துரை வழங்கப்பட்டது. திருமதி. சத்தியசீலன்(ஓய்வுநிலை உப பீடாதிபதி, வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி) அவர்கள் பேச்சாளரை அறிமுகம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் உப பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவ ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர். |