முழுநிலா அரங்க நிகழ்வானது 09.03.2020 அன்று யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் பீடாதிபதி உயர்திரு சுப்பிரமணியம் பரமானந்தம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. ஆசிரிய கல்வியியலாளர் திரு.ஞா.இரட்ணசிங்கம் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. தொடந்து திரு.பு.கணேசராசா(ஆசிரியர்) நெறியாள்கையில் 'பச்சை மரமும் படும்'எனும் நாடகம் அரங்கேற்றப்பட்டது. இந்நிகழ்வின் ஒழுங்கமைப்பை ஆசிரிய கல்வியியலாளர் திரு.க.இ.கமலநாதன் மேற்கொண்டிருந்தார்.