Application of National Colleges of Education 2021(2022)
Posted On : 2022-07-21 20:25:56
மூன்று வருடகால சேவை முன் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பாடநெறியைப் பயிலுவதற்காக 2019 ஆம் ஆண்டு 2020 ஆம் ஆண்டு க.பொ.த. (உயர் தர) பெறுபேற்றின் அடிப்படையில் பயிலுநர்களின் இரு தொகுதியினரை ஒரே தடவையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு உள்வாங்குவதற்கு 22.07.2022 திகதிய வர்த்தமானப் பத்திரிகையில் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
இம்முறை யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரிக்கு ஆரம்பக்கல்வி, விஞ்ஞானம் (தமிழ், ஆங்கிலம்), கணிதம் (தமிழ், ஆங்கிலம்), ஆங்கிலம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், சித்திரம், சங்கீதம், நடனம், விசேட கல்வி என்பவற்றுடன் இம்முறை புதிதாக உடற்கல்விப் பாடநெறிக்கும் மாணவர்கள் உள்ளீர்க்கப்படவுள்ளனர். மேலும், எமது கல்லூரிக்கு இம்முறை அண்ணளவாக 370 மாணவர்கள் உள்ளீர்க்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்ப இறுதித்திகதி 12.08.2022.