யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி திரு. இராசையா லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் கணித மற்றும் விஞ்ஞான மாணவ ஆசிரியர்களுக்கான கணித ஒலிம்பியாட் பரீட்சை தொடர்பான செயலமர்வு 17.03.2025 அன்று கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. வளவாளராக மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியைச் சேர்ந்த கணித பாட ஆசிரியர் திரு நாகராசா கேதீஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டார். இந்நிகழ்வுக்கான ஒழுங்குபடுத்தல்களை நிறுவன அபிவிருத்திக்கான உப பீடாதிபதி திரு. அருணாசலம் குகன் அவர்கள் மேற்கொண்டிருந்தார்.