முன்னாள் உடுவில் கிரமாசபைத்தலைவரும் முன்னாள் மானிப்பாய் தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான அமரா் விசுவநாதர் தர்மலிங்கம் அவர்களின் 40வது ஆண்டு நினைவு தினம் 02.09.2025 அன்று யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் பீடாதிபதி இரா.லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துவதோடு ஆரம்பித்து சிறப்பாக நடைபெற்றது . வாழ்நாள் பூராக தோல்வியே காணாத அமரா் தர்மலிங்கம் அவர்களின் நினைவுகப் பேருரையை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்னாள் சட்டத்துறை தலைவரும் சட்டத்தரணியுமாகிய கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நிகழ்த்தினார்,இந்நிகழ்வில் வவுனியா மாநகர சபை முதல்வர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளர் நிரோஷ் உட்பட தர்மலிங்கம் நினைவுச்சபை உறுப்பினர்கள்,கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர்கள்,ஆசிரிய மாணவர்கள்,பொது அமைப்புகளின் உறுப்பினர்கள் எனப்பலரும் பங்கேற்றனர். ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |