கல்வியமைச்சின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பப் பிரிவினரால் 07.11.2024 அன்று நடாத்தப்பட்ட தேசிய கல்வியியற் கல்லூரிகளில் தற்கும் மாணவ ஆசிரியர்களுக்கிடையிலான தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பப் போட்டியில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் கல்வி கற்கும் 22 மாணவ ஆசிரியர்கள் பங்கு பற்றி தமது முன்வைப்புக்களை மேற்கொண்டனர்.
மாணவ ஆசிரியர்களுக்கான வழிகாட்டல்களை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப விரிவுரையாளர் திரு. வே. நந்தகுமார் அவர்கள் வழங்கியிருந்தார். மாணவர்களை போட்டிக்கு அழைத்துச் செல்வதற்காக விரிவுரையாளர் செல்வி இந்துறேகா அவர்கள் தமது பங்களிப்பை வழங்கியிருந்தார்.
போக்குவரத்து அநுசரணையின் ஒரு பகுதி விரிவுரையாளர் அம்பிகைபாகன் அவர்களின் வழிப்படுத்தலுடன் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் வழங்கியிருந்து.
|