யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி உயர்திரு சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் இணைய வழியிலான 21 ஆவது கல்லூரி தின சிறப்பு நிகழ்ச்சியானது 02.05.2021 அன்று மு.ப 8.30 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் முன்னைநாள் ஓய்வுநிலைப் பீடாதிபதிகளான உயர்திரு. கலாநிதி தி. கமலநாதன், உயர்திரு. S.K.. யோகநாதன், உயர்திரு. கலாநிதி S. அமிர்தலிங்கம்; , உப பீடாதிபதிகளான திரு T. ஜெயகாண்டீபன்(நிதியும் நிர்வாகமும்) , செல்வி. S. செல்வமலர்(கல்வியும் தரமேம்பாடும்) மற்றும் பதிவாளர் திரு. A. அருள்நேசன் ஆகியோரின் வாழ்த்துரைகள் இடம்பெற்றது. தொடர்ந்து கலாசுரபி இலத்திரனியல் சஞ்சிகை வெளியீடு, குருதீபம் 25 ஆவது இதழ் வெளியீடு, கல்லூரி வரலாறும் வளர்ச்சியும் இறுவட்டு வெளியீடு, குறும்பட வெளியீடு(K.R. கமலநாதன், விரிவுரையாளர்) , கலாநிதி பா. தனபாலன்(முதுநிலை விரிவுரையாளர்) அவர்களின் கருத்துரை இடம்பெற்றது. கலை நிகழ்வுகளைத் தொடர்ந்து திரு.S.R. சத்தியேந்திரம்பிள்ளை(முதுநிலை விரிவுரையாளர்) அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுபெற்றது. ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |