யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரியின் மாணவர் விடுதி தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றப்பட உள்ளதன் காரணமாக விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த 370 மாணவ ஆசிரியர்கள் அவர்களது வீடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கையினை கல்லூரி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
அதன் அடிப்படையில் அந்தந்த மாவட்டங்களுக்கு உரியவர்களை தனித்தனியான பேருந்தில் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையினை கல்லூரி நிர்வாகம் இராணுவத்துடன் இணைந்து முன்னெடுத்துள்ளது.
12.10.2020 காலையில் சுமார் 8 பேருந்துகளில் 75 ஆண் ஆசிரிய பயிலுனர்களும் 295 பெண் ஆசிரிய பயிலுனர்களும் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
![]() ![]() ![]() ![]() ![]() |