யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் இரண்டு வருடங்கள் உள்வாரியான கற்கையை நிறைவு செய்து பாடசாலைகளில் ஒரு வருடங்கள் உள்ளகப்பயிற்சியில் ஈடுபடவிருக்கும் முகிழ்நிலை மாணவ ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கல் நிகழ்வானது 10.08.2020 அன்று பீடாதிபதி திரு சுப்பிரமணியம் பரமானந்தம் தலைமையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கான ஒழுங்கமைப்பை விரிவுரை இணைப்பாளர்(தொடருறு கல்வி) திரு. க. பாஸ்கரன் அவர்கள் மேற்கொண்டார். உப பீடாதிபதிகள், விரிவுரை இணைப்பாளர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த வருடம் உள்ளகப் பயிற்சிப் பாடசாலைகள் கிளிநொச்சி மாவட்டம் வரை விஸ்தரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். |