யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் மூன்று வருடங்கள் தமது பயிற்சியைப் பூர்த்தி செய்து பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக நியமனம் பெறவுள்ள மாணவ ஆசிரியர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நிகழ்வானது 30.07.2020 அன்று கல்லூரியின் பிரதான மண்டபத்தில் பீடாதிபதி உயர்திரு சுப்பிரமணியம் பரமானந்தம் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக எமது கல்லூரியின் முன்னைநாள் ஓய்வுபெற்ற பீடாதிபதி Dr. சதாசிவம் அமிர்தலிங்கம் அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு. செல்லையா இளங்கோ(அதிபர், யா/ புத்தூர் சிறீ சோமாஸ்கந்த கல்லூரி) அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் மாணவர்களால் விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் கௌரவிக்கப்பட்டனர். ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |